ஓடும் அரசு பேருந்தில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி.. மனசாட்சியே இல்லாமல் நிற்காமல் சென்ற பேருந்து : வைரலாகும் ஷாக் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan4 December 2022, 12:52 pm
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஓடும் அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவி,நிற்காமல் சென்ற பேருந்து வைரலாகும் காட்சிகள்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரை ஓடும் அரசு பேருந்தில் இருந்து மாணவி ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெய்யாற்றின் கரை பகுதியை சேர்ந்த ஐடி முதலாம் ஆண்டு மாணவி வனிதா திருவானந்தபுரம் செல்ல அரசு பேருந்தில் செல்லும் போது படிக்கட்டின் அருகே நின்றுள்ளார்.
பேருந்து காசநோய் சந்திப்பு பகுதியில் வரும் போது கதவு திடீரென திறந்து நிலையில் மாணவி கிழே விழுந்தார். பின்னர் பேருந்து நிற்க்காமல் சென்ற நிலையில் பொதுமக்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்
இந்த நிலையில் காட்சிகள் வைரலான நிலையில் நெய்யாற்றின் கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.