கடலில் குளிக்க சென்ற போது அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்… ஷாக் கொடுத்த RED LIGHT HOUSE!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2024, 10:00 pm

கடலில் குளிக்க சென்ற போது அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்… ஷாக் கொடுத்த RED LIGHT HOUSE!!

திருவள்ளூர் மாவட்டம் மணலி பகுதியை சேர்ந்தவர் மீஞ்சூரில் தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சைன்ஸ் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் யோகேஷ். இன்று நண்பர்களுடன் பழவேற்காடு கடலில் குளிப்பதற்காக லைட் ஹவுஸ் கடற்கரைக்கு சென்று உள்ளார்.

அங்கு கடலில் குளிக்கும் போது கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடியுள்ளார். அங்கிருந்தவர்கள் மீனவர்களின் உதவியுடன் யோகேஷை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் யோகேஷ் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மற்ற மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 370

    0

    0