காதலனை தனிமையில் சந்தித்த கல்லூரி மாணவி.. திடீரென வந்த 4 பேர் : கத்தி முனையில் நடந்த கொடூர சம்பவம்.. அதிர்ந்த தமிழகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 January 2023, 5:30 pm

ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த குண்டு குளம் பகுதியில் பி.ஏ.வி என்ற தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. பெங்களூர் டு பாண்டிச்சேரி செல்லும் புறவழி சாலையான இந்தப் பகுதியில் கல்லூரிக்கு 200 மீட்டர் தூரத்தில் பிளாட்டுகள் போடப்பட்டுள்ள இடத்தின் வழியே பள்ளியின் பின்புறத்தில் உள்ள கறம்பு நிலத்தில் மேட்டான பகுதியில் கற்பழிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இந்தப் பகுதியில் காதலர்கள் பைக்கில் வரும்போது பிளாட்டில் உட்கார்ந்து மதுபானம் அருந்தி கொண்டிருந்த இளைஞர்களிடம் மாணவி ஒருவர் சிக்கியுள்ளார்.

உடனே வாருங்கள் என தன்னுடைய நண்பர்களுக்கு தகவல் அளித்ததின் பேரில் இரண்டு நண்பர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

மாணவனும், மாணவியும் அடிக்கடி இங்கு சந்தித்து வரும் நிலையில், அவர்களிடம் கத்தியை காண்பித்து, கல்லூரி மாணவி கழுத்தில் கத்தியை வைத்து ஒருவர் பின் ஒருவராக நான்கு பேரும் வன்புணர்ச்சி செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கல்லூரி மாணவி மிரட்டலுக்கும் கத்திக்கும் பயந்து நான்கு இளைஞர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்த காரணத்தினால் எந்த விதமான காயமோ அசம்பாவிமோ நடைபெறவில்லை.

கல்லூரி மாணவியை நேற்று இரவு வீட்டில் விட்டு வந்த காதலன், தன்னுடைய சித்தப்பா மூலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர்.

மேலும் கல்லூரி மாணவர்களிடையே விசாரணை செய்ததில் நான்கு நபர்களும் மாஸ்க் அணிந்திருந்ததால் எங்களுக்கு சரியாக அடையாளம் காணப்படவில்லை என கூறினர்.

அந்த நான்கு இளைஞர்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தையில் விமல் என்ற பெயர் அடிபட்டதால் விப்பேடு பகுதியை சேர்ந்த விமல் என்பவரை காவல்துறையினர் சென்று தேடினர்.

அப்போது விமல் தப்பி ஓடியதால் அவரை கைது செய்து தாலுக்கா காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்கின்றார்கள்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் விப்பேடு பகுதியை சேர்ந்த பூபாலன் என்பவரையும் காவல்துறையினர் அழைத்து வர அந்த கிராமத்துக்கு சென்றுள்ளனர்.

இந்த கேங் ரேப் விஷயம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது எனவும் கூறலாம். ஏற்கனவே கடந்த மாதம் ஸ்ரீபெரும்புதூரில் காதலனுடன் இருந்த ஒரு பெண்ணை மிரட்டி இரண்டு பேர் கற்பழித்தனர்.

அதேபோல் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணை பைக்கில் வந்த இரண்டு நபர்கள் மிரட்டி கற்பழிக்க முயற்சி செய்தனர்.

அதே தினத்தில் வாலாஜாபாத் காவல் நிலைக்கு உட்பட்ட பகுதியிலும் ஒரு பெண்ணை மிரட்டி வாகனத்தில் ஏற்ற முயற்சிக்கும் போது அப்பகுதி மக்கள் கூடியதால் தப்பி சென்றனர்.

அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண்ணை இருவர் பைக்கில் கடத்த முயற்சித்தபோது மக்கள் திரண்டதால் மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.

கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ஐந்து சம்பவங்கள் இதுபோல் நடந்துள்ளதால் இரண்டு டிஎஸ்பிகள் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமான விசாரணை செய்து வருகின்றார்கள். செய்தி வெளியே கசிய கூடாது என்பதில் காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 487

    0

    0