விழுப்புரம் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள ஒருகோடி என்ற கிராம எல்லையில் ஒரு காலி நிலத்தில் காலை வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
அவரது பின்பக்க தலை, நெற்றிப்பகுதி, வாய் ஆகிய இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது. இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே இதுகுறித்து அவர்கள், காணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், விழுப்புரம் அருகே கப்பூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியன் மகன் ராஜன் என்கிற ராமன் (வயது 22) என்பதும், இவர் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
ராஜனின் உடலில் இருந்த வெட்டுக்காயங்களின் அடிப்படையில் அவரை நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், வெட்டிக்கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர். பின்னர் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.
அதன் பிறகு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி அங்குள்ள மெயின்ரோடு வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
தொடர்ந்து, ராஜனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இவர்களின் முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட ராஜன், ஒருகோடி கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய ஒரு சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
இந்த விஷயம் அந்த சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.அவர்கள், ராஜனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் ராஜன் அதை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.
ராஜனும், அந்த சிறுமியின் சித்தப்பாவுமான சத்யராஜ் (28) என்பவரும் நண்பர்கள் ஆவர். சத்யராஜ், தனது நண்பர் ராஜனிடம் சென்று தனது அண்ணன் மகள் மீதான காதலை கைவிடுமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதனையும் ராஜன் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என தெரிகிறது. இந்த சூழலில் நேற்று நள்ளிரவு சம்பவ இடத்தில் சத்யராஜ், அவரது நண்பரான விழுப்புரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த வெங்கடேசன் மகன் லாலி கார்த்திக் என்கிற சரவணன் (30) மற்றும் ராஜன் ஆகிய 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர்.
அப்போது அந்த காதல் விவகாரம் தொடர்பாக சத்யராஜிக்கும் ராஜனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சத்யராஜ், லாலி கார்த்திக் ஆகிய இருவரும் சேர்ந்து ராஜனை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதுதொடர்பாக லாலி கார்த்திக், சத்யராஜ் ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.