காதலி வசிக்கும் தெருவில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவர்… சாவில் மர்மம்.. உறவினர்கள், நண்பர்கள் மறியலால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2023, 6:37 pm

காதலி வசிக்கும் தெருவில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவர்… சாவில் மர்மம்.. உறவினர்கள், நண்பர்கள் மறியலால் பரபரப்பு!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த வேடகட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் சுள்ளான்,(20) என்பவர் அரூர் அருகே இயங்கி வரும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஈட்டியம்பட்டி கூட்ரோடு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஆகிய இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

அவரை பார்ப்பதற்கு இரவு நேரத்தில் சொந்த கிராமத்தில் இருந்து இளைஞர் சென்றதாகவும், அந்தப் பெண்ணின் சொந்த கிராமத்திற்கு முன்பாகவே உள்ள வேப்பம்பட்டி கிராமத்தின் அருகே சாலை ஓரத்தில் இறந்து கிடந்துள்ளார்.

தகவலறிந்த உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பின்பு உடலை கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்துச் சென்றனர்.

இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்த உறவினர் அரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

சுள்ளான் இறப்பிற்கு நீதி வேண்டி 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உறவினர்கள் ரவுண்டாணா சாலை சந்திப்பில் சாலையில் உருண்டு மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதில் சென்னை திருவண்ணாமலை சேலம் பெங்களூர் செல்லக்கூடிய மக்கள் பேருந்து பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

பெற்ற தாய் உறவினர்கள் சாலையில் உருண்டு கதறி அழுத காட்சி பார்ப்பவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ