காட்டு யானைகளிடம் இருந்து நூலிழையில் குழந்தை, மனைவியுடன் தப்பிய கட்டிடத் தொழிலாளி : பதை பதைக்க வைக்கும் காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2024, 1:02 pm

காட்டு யானைகளிடம் இருந்து நூலிழையில் குழந்தை, மனைவியுடன் தப்பிய கட்டிடத் தொழிலாளி : பதை பதைக்க வைக்கும் காட்சி!

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் மூன்று யானைகள் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் கதிர் நாயக்கன்பாளையம் பகுதிக்குள் இன்று அதிகாலை நுழைந்துள்ளது.

அப்போது அங்கு கட்டிட தொழிலாளர்கள் தங்கி உள்ள தகர செட்டுகளை உடைத்து மூன்று யானைகளும் அரிசியை தேடியுள்ளது. இதனை தொடர்ந்து தகர செட்டுக்குள் தங்கி இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளேயே பதுங்கிக் கொண்டுள்ளனர்.

தொடர்ந்து எதிர் வீட்டில் குடியிருக்கும் நபர்கள் வட மாநில தொழிலாளர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியே வரும்படி அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஒரு தொழிலாளி மட்டும் தகர செட்டுக்குள் இருந்து வெளியே ஓடினார். அப்போது அவரை ஆண் யானை ஒன்று தாக்க முன்ற நிலையில் யானையிடம் இருந்து அத்தொழிலாளி தப்பித்து அருகில் உள்ள குடியிருப்புகள் புகுந்து உயிர் தப்பினார்.

அவர் பின்னாடி குழந்தையை தூக்கிக் கொண்டு அவரது மனைவியும் தப்பியோடினார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த மூன்று யானைகளும் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புகளை மட்டுமே குறி வைத்து அரிசி மற்றும் மாட்டு தீவனங்களை சாப்பிடுகிறது எனவுன் எந்த வீடாக இருந்தாலும் அதனை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அரிசியை சாப்பிட்டு வருகிறது என்றனர்.

மற்ற யானைகள் ஊருக்குள் புகுந்தால் விவசாய பயிர்களை மட்டும் சேதப்படுத்துவதோடு நின்று விடுகிறது என கூறிய மக்கள் ஆனால் இந்த மூன்று யானைகளும் எங்கு அரிசி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து அந்த வீட்டை மட்டும் உடைத்து உள்ளே செல்கிறது என்றனர்.

இதன் காரணமாக மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர் வனத்துறையினர் வந்து இந்த யானைகளை விரட்டினாலும் இந்த யானைகள் பயப்படுவதில்லை, அதே சமயம் நீதிமன்ற உத்தரவை காட்டி பட்டாசு வெடித்து யானைகளை விரட்டவும் வனத்துறையினர் தயங்குவதாக கூறினர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ