அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி.. கண்ணிமைக்கும் நேரத்தில் பைக் மீது மோதி விபத்து : ஸ்பாட்டில் ஒருவர் பலி…!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2022, 6:42 pm

கோவை : குறிப்பிட்ட நேரங்களை மீறி மாநகர பகுதியில் இயங்கிய லாரியால் விபத்து ஏற்பட்டு ஒருவர் பலி இருவர் படுகாயமடைந்தனர்.

கோவையில் அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரபகுதியில் குறிப்பிட்ட நேரங்களை தவிர்த்து லாரிகள் இயக்கப்படுவதல் அடிக்கடி சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நேர கட்டுப்பாடுகளை மீறி கோவை சரவணம்பட்டி விளாங்குருச்சி சாலையில் அதிவேகமாக வந்த கண்டையெனர் லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் இருவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பலத்த காயம் அடைந்த இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுனரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!