8 மாத குழந்தையுடன் பைக்கில் சென்ற தம்பதி..கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து : பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 December 2022, 6:53 pm

தருமபுரி மாவட்டம் அரூர் நான்கு ரோடு அருகே உள்ள கரூர் வைசியா பேங்க் முன்பு உள்ள சாலையில் இருசக்கர வாகனம் மோதியதில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற குழந்தை உட்பட மூன்று பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

அரூர் ரவுண்டானாவில் இருந்து நான்கு ரோடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் ஜான் ராஜ் என்பவர் அவருடைய மனைவி மற்றும் 8 மாத குழந்தையுடன் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் வாகனத்தை வளைக்க முற்பட்ட பொழுது அந்த வாகனம் எதிரே வந்த வாகனத்தை உரசியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.

அருகே இருந்த பொதுமக்கள் மூவரையும் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுசென்றதில் எட்டு மாத குழந்தைக்கு தலையில் அடிபட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

கணவன் மனைவி இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக மூவரும் உயிர் தப்பினர். அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இந்த சாலையில் இரும்பு தடுப்புகளை அமைக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினரிடம் பலமுறை இப்பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் பொதுமக்கள் வலியுறுத்தியும் இதுவரை போக்குவரத்து காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே விபத்துக்கள் ஏற்படாத வகையில் இரும்பு தடுப்புகளை அமைத்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என வணிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

  • ajith praise adhik ravichandran after watching good bad ugly movie என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?