பேரனுடன் பைக்கில் வந்த தம்பதி.. நாளை முடிகாணிக்கை செலுத்த திருச்சிக்கு பயணம் : சட்டென நடந்த விபத்து.. மதுரையில் சோகம்!!
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. அவரின் மனைவி சசிகலா வயது 46. காளவாசல் பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ராஜா அவரது மனைவி மற்றும் இரண்டரை வயது பேரக்குழந்தை மூவரும் இருசக்கர வாகனத்தில் மதுரை பைபாஸ் சொக்கலிங்க நகர் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது குறுக்கே ஒருவர் சைக்கிளில் வந்ததால் நிலை தடுமாறி திருமங்குலம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியதால் ராஜா அவரது பேரன் இடதுபுறம் விழுந்தனர்.
மேலும் இவரது மனைவி கலா வலது புறம் விழுந்ததால் அரசு பேருந்து சக்கரம் அவர் மீது ஏறி உடல் நசிங்கி கணவர் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார் இதை பார்த்த அவரது கணவர் துடிதுடித்து அழுதார்.
தகவல் அறிந்த தீடிர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து ராஜாவிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது நாளை உறவினர் வீட்டுக்கு எனது மனைவி சசிகலா, பேரன் ஆகியோரை உறவினர் விட்டிற்கு சென்று நாளை சமயபுரம் கோவிலில் தனது பேரனுக்கு முடி காணிக்கை செலுத்துவதால் அவர்களை பேருந்துதில் ஏற்றிவிடுவதற்க்காக வந்த பொழுது இப்படி ஆகிவிட்டது என்று பரிதாபத்துடன் போலிசாரிடம் தெரிவித்தார்.
இதனால் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது மேலும் விபத்து குறித்து அரசு பேருந்து ஒட்டுனரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.