ஒரே நேரத்தில் இரு குழந்தைகளை பறிகொடுத்த தம்பதி.. வயல்வெளியில் விளையாட சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த துயரம்!

Author: Udayachandran RadhaKrishnan
16 December 2023, 1:34 pm

ஒரே நேரத்தில் இரு குழந்தைகளை பறிகொடுத்த தம்பதி.. வயல்வெளியில் விளையாட சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த துயரம்!

திருவள்ளூர் மாவட்டம் அருகே உள்ள கிராமம் கண்ணியம்பாளையம் ஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில் வசிப்பவர் முனுசாமி வயது 44.

ஒரு தனியார் பேப்பர் மில் கம்பெனியில் வேலை செய்கிறார். தாயார் ஜீவா வயது 37.தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்.

முனுசாமியும் ஜீவாவும் வேலைக்கு சென்ற நிலையில் பள்ளிக்கு விடுமுறை என்பதால் விஷ்வா வயது 12 7ஆம் வகுப்பு மாணவன். சூர்யா வயது 11. 6ஆம் வகுப்பு மாணவன். இருவரும் வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் விளையாடுவதற்காக சென்றதாக தெரிகிறது.

இந்த நிலையில் காலை 8:30 மணி அளவில் சென்று அவ்வழியாக சென்று பார்த்த போது இருவரும் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கிராம மக்களுக்கு அளித்த தகவலின் பேரில் உடனடியாக அங்கு சென்று பார்த்த போது இருவரும் மின்சாரம் தாக்கி இறந்தது தெரிந்தவுடன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சோழவரம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சோத்து பெரும்பேடு மின்வாரிய ஊழியர் மற்றும் விவசாயின் அலட்சியம் காரணமாக அண்ணன் தம்பி இருவர் உயிர் இழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 353

    0

    0