50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசு : வெகு நேர போராட்டத்திற்கு பிறகு கிரேன் உதவியுடன் மீட்ட தீயணைப்புத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2022, 4:37 pm

சத்தியமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை கிரேன் உதவியுடன் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராஜநகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்வம். இவர் தனக்கு சொந்தமான விளை நிலத்தின் அருகே தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அருகே உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள கிணற்றில் பசு மாடு தவறி விழுந்துள்ளது. கிணற்றில் இருந்து பசு மாட்டின் சத்தத்தை கேட்ட ராஜேந்திரன் பசு மாட்டின் உரிமையாளரிடம் செல்வத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிரேன் உதவி மூலம் 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை சிறிது நேரம் போராடி உயிருடன் விட்டனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ