11 வருடங்களுக்கு பிறகு சிக்கிய குற்றவாளி.. கை ரேகையால் சிறைக்கு சென்ற விநோத சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2023, 10:17 am

கடந்த 2012 ஆம் ஆண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை அவரது கைரேகையை கொண்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்த மதுரை காவல்துறை.

மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலையத்திறகு உட்பட்ட அண்ணா நகர் கிராமத்தில் வசிக்கும் மலைசாமி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளியின் கைவிரல் ரேகை, சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது.

தற்போது கைவிரல் ரேகை குறித்த நவீன மென்பொருளான National Automated Finger Print Identification System – NAFIS காவல்துறையால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மென்பொருளின் மூலம் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள பழைய வழக்குகளில் விரல் ரேகையை ஒப்பிட்டு பார்த்த போது, ராமநாதபுரம் கடலாடி காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் சேவுகராஜ் என்பவருடைய விரல் ரேகையுடன் ஒத்துப் போனது உறுதி செய்யப்பட்டது.

தற்போது முதுகுளத்தூர் கிளை சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள சேவுகராஜ், 2012 ஆம் ஆண்டு வழக்கின் அடிப்படையில் சம்பிரதாய கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருட்டு போன பொருட்களை மீட்கும் முயற்சியை மதுரை மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

பதிவான விரல் ரேகையின் அடிப்படையில் 11 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குற்ற சம்பவத்தின் அடிப்படையில் குற்றவாளியைக் கண்டுபிடித்த விரல் ரேகை வல்லுனர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பாராட்டினார்.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 496

    0

    0