கோவை நொய்யல் ஆற்றில் மிதந்த சடலம்… நடைபயிற்சி சென்றவருக்கு விபரீதம் : விசாரணையில் ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2024, 11:44 am

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய காளிமுத்து. இவர் முன்னாள் மின்வாரிய ஊழியராக பணியாற்றியவர்.

இந்நிலையில் இன்று காலை தனது மனைவியிடம் நடைப்பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வராததால். அவரது மகன் ஆனந்தனுக்கு அவர் தாய் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தனர். அப்பொழுது காளிமுத்து நண்பர் ஒருவர் ஆனந்தனை தொடர்பு கொண்டு அவரது தந்தை புட்டுவிக்கி சாலையில் உள்ள நொய்யல் ஆற்றில் நீரில் மூழ்கி இறந்து உள்ளதாக தகவல் தெரிவித்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் அங்கு சென்று பார்த்தார். அவரது தந்தை இறந்து கிடந்தார். மேலும் இது குறித்து பேரூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை கனமழையாக பெய்து அப்பகுதியில் உள்ள நொய்யல் ஆறு நிரம்பி செல்கிறது. நீரில் மூழ்கி தான் உயிரிழந்தாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ? என காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 254

    0

    0