ஆவின் பால் பாக்கெட்டில் இறந்து கிடந்த ஈ : நுகர்வோர் அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2022, 11:38 am

மதுரை ஆவினில் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர்.

மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்ற பால் பாக்கெட்டில் செத்துப் போன ஈ இருந்ததால் பால் பாக்கெட் திரும்ப பெறப்பட்டது.

பேக்கிங் செய்யும்போது தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆவின் பால் பாக்கெட் விற்பனையில் ஊழல் நடைபெறுவதாகவும், அளவு குறைந்துள்ளதாக தமிழக பாஜக அண்மையில் புகார் தெரிவித்திருந்தது.

திமுக ஆட்சிக்கு வந்த மின் கட்டண விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என அடுத்தடுத்து தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தந்த நிலையில் சமீபத்தில் ஆவினில் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டது.

https://vimeo.com/751988097

இந்த நிலையில் ஆவின் பால் பாக்கெட்டில் இறந்து போன ஈ கிடந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!