GAY, LESBIAN காதல் தப்பேயில்ல… அதிர்வலையை ஏற்படுத்திய பா.இரஞ்சித்தின் வித்தியாசமான படம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2022, 6:11 pm

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை படமாக எடுத்து வருபவர் இயக்குனர் பா.ரஞ்சித். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் எந்த அளவிற்கு சமூக கருத்துக்களை பேசுகிறதோ அதே அளவிற்கு சர்ச்சைகளையும் கிளப்பிவிடும்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது எனும் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. LGBTQ உறவுகளை மையமாக வைத்து இந்த திரைப்படம் நல்ல பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தில் துஷாரா விஜயன், ஷபீர், ஹரி கிருஷ்ணன், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் ஆக.,31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இன்று வெளியான டிரைலரை பார்க்கும் போது படம் முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதை உணர்த்துகிறது. தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையேயான காதல், திருநங்கைக்கும் ஆணுக்குமான காதல் என அழுத்தமான பல விஷயங்கள் இருக்கிறது.

Natchathiram Nagargiradhu Official Trailer | Pa Ranjith | Tenma | Kalaiarasan, Kalidas, Dushara

மேலும், இந்த ட்ரைலர் மட்டுமல்ல, இப்படமும் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என தற்போதே விமர்சகர்கள் கணிக்க தொடங்கி விட்டனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!
  • Close menu