ஸ்மார்ட் வகுப்பறையாக மாறிய பாழடைந்த பள்ளி வகுப்பறை : பாமகவினர் எடுத்த முயற்சிக்கு குவியும் வரவேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2022, 2:29 pm

பாழடைந்த அரசு பள்ளி வகுப்பறையை புதுப்பித்து ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றிய பாமக கட்சியினர்.

கோவை சுந்தராபுரம் காமராஜர் பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியின் வகுப்பறை பாழடைந்து பொழிவிலந்து கிடந்த சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் அந்த வகுப்பறையை புனரமைத்து புதிய மாதிரி வகுப்பறை யாக மாற்றியமைத்து காட்டியுள்ளனர்.

மேலும் பள்ளியின் வகுப்பறையில் வர்ணம் பூசி , எழுத்து பலகை அமைத்து, டிவி மற்றும் projector screen அமைத்து மாணவ மாணவிகள் அமர புதிய இருக்கைகள்
அமைத்து கொடுத்துள்ளனர்.

மேலும் பாமக கட்சியினர் கூறுகையில், அரசு பள்ளிகள் அனைத்தும் தரம் குறைந்து காண்படுகின்றது. இதனை புதுப்பிக்கும் விதமாக ஒரு முன் மாதிரியான நவீன வசதிகளோடு வகுப்பறை ஒன்றை உருவாக்கி கொடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…