சினிமா படம் எடுக்க குடும்பமே கொள்ளையடித்த அதிர்ச்சி சம்பவம் : தந்தை, தாய், மகன் கைது!!!
தூத்துக்குடி மாவட்டம் பங்காளத்தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி என்பரவது மனைவி பூமாரி என்ற முத்துமாரி (57. இவர் கடந்த மாதம் 15ந்தேதி இரவு தனது வீட்டின் முன்பு அமர்ந்து இருந்த போது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பூமாரி கழுத்தில் அணிந்து இருந்த 12பவுன் தங்க நகையை பறித்து விட்டு சென்றனர்.
அதே போன்று கோவில்பட்டி ஏ.கே.எஸ் தியேட்டார் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த கதிரேசன் கோவிலைச் சேர்ந்த வெள்ளாத்தாய் (44) என்பவரிடம் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பிச்சென்றனர்.
இந்த 2 வழிப்பறி சம்பவங்கள் குறித்து கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும் 2 இடங்களில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, பச்சையங்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்த பீருஷா மகன் சனாபுல்லா(42), அவரது மனைவி ரசியா(38), மகன் ஜாபர் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 3 பேரும் மகாராஷ்டிரா மாநிலத்தினை பூர்வீமாக கொண்டவர்கள், தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். குடும்பத்தினர் ஒன்றிணைத்து திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது.
தந்தையும், மகனும் பைக்கில் சென்று வழிப்பறி, திருட்டில் ஈடுபட்ட நகைகளை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் சனாபுல்லா நான் அவன் தான் என்ற திரைப்படம் எடுத்து உள்ளதாகவும், அதனை விரைவில் வெளியே திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்த நிலையில் கோவில்பட்டியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த திரைப்படத்தில் சனாபுல்லா முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. பெண்களிடம் பைக் ஓட்டும் போது ஒருவரும், நகையை பறித்தும் மற்றொருவர் என மாற்றி, மாற்றி பைக்கினை காவல்துறையினரை குழப்பி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திரைப்படம் எடுக்க குடும்பமே வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.