திருட்டை மட்டுமே குலத்தொழிலாக செய்த குடும்பம்… பெண் டெய்லரால் வெளுத்துப்போன சாயம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 September 2023, 10:17 pm

திருட்டை மட்டுமே குலத்தொழிலாக செய்த குடும்பம்… பெண் டெய்லரால் வெளுத்துப்போன சாயம்!!!

திருப்பூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவர் அப்பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நிர்மலாவின் வீட்டில் 18 பவுன் நகை, ரூ.38;500 திருட்டுப்போனது.

இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் நிர்மலா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நிர்மலாவின் கடைக்கு வந்து செல்லும் மரகதம் என்கிற சுபாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். தொடர் விசாரணை நடத்தியபோது, நிர்மலாவின் கடைக்கு சுபா அடிக்கடி வந்து செல்வதால் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டுகளாக இருவரும் பழகி வந்ததால், நிர்மலா வீட்டில் என்னென்ன இருக்கிறது என்பதை நன்கு தெரிந்து கொண்டார். சம்பவத்தன்று கடையில் இருந்த நிர்மலா வீட்டு சாவியை எடுத்துச் சென்று கதவைத் திறந்து பீரோவில் இருந்த நகை பணத்தை திருடிய சுபா,

கணவர் விக்னேஷ் மற்றும் விக்னேசின் தம்பி தீனதயாளன் ஆகியோரிடம் கொடுத்துவிட்டு, பின்னர் சாவியை நிர்மலாவுக்கு தெரியாமல் அதே இடத்தில் வைத்து சென்றதும் தெரியவந்தது. பின்னர் திருடிய நகைகளை விக்னேசின் தாய் ஈஸ்வரி விற்றதும் தெரிய வந்தது.

இதனையடுத்து வீரபாண்டி போலீசார் மரகதம் என்கிற சுபா (வயது 28), ஈஸ்வரி (வயது 44), விக்னேஷ் (வயது 30), தீனதயாளன் (வயது 25) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 6 1/2 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!