பழனி முருகனை தரிசனம் செய்த பிரபல நடிகர்… கிரிவலம் வந்து வழிபாடு நடத்திய வீடியோ வைரல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2023, 10:54 am

பழனி முருகன் கோவிலில் பிரபலங்கள் தரிசனம் செய்து வரும் நிலையில் இன்று நடிகர் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தார்.

பழனி முருகன் கோவிலுக்கு திரைப்பட நடிகர் சந்தானம் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். முன்னதாக மலையடிவாரத்தில் உள்ள மூன்று கீலோ மீட்டர் கிரிவலப் பாதையில் நடிகர் சந்தானம் கிரிவலம் வந்தார்.

பின்னர் ரோப்கார் மூலமாக மலை மீது சென்ற நடிகர் சந்தானம் முருகனை தரிசனம் செய்தார். நடிகர் சந்தானத்திற்கு பழனி கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சந்தானம் நடிக்கும் வடுகப்பட்டி ராமசாமி என்ற திரைப்படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சந்தானம் மற்றும் திரைப்பட குழுவினர் பழனியில் தங்கியுள்ளனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…