நடிகர் விஜய் வீட்டருகே அடம்பிடித்து வீடு வாங்கிய பிரபல நடிகை.. அட விஜய்யோட ஆஸ்தான ஜோடியாச்சே!!

Author: Udayachandran RadhaKrishnan
15 January 2023, 8:04 pm

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார். நடிகர் விஜய் தற்போது நீலாங்கரையில் வசித்து வருகிறார். அவருடைய வீட்டை அனைவரும் பார்த்திருப்போம்.

இந்நிலையில், விஜய்யின் வீட்டின் அருகே ரூ. 35 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான புதிய வீட்டை வாங்கியுள்ளாராம் நடிகை திரிஷா.

ஏற்கனவே அஜித் வீட்டின் அருகே ரூ. 5 கோடி மதிப்பில் ஃபிளாட் ஒன்றை வாங்கியிருந்த திரிஷா, தற்போது புதிதாக வீடு ஒன்றை விஜய் வீட்டின் அருகே வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

நடிகை திரிஷா பல ஆண்டுகளுக்கு பின் விஜய்க்கு ஜோடியாக தளபதி 67 படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் நடந்த தளபதி 67 படத்தின் பூஜையில் கூட திரிஷா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Mookuthi Amman 2 latest shooting update அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!