பெண் ஊழியர் வீட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரபல தொழிலதிபர்.. விசாரணையில் பகீர் : பரபரப்பு திருப்பம்…!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 November 2023, 7:51 pm

பெண் ஊழியர் வீட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரபல தொழிலதிபர்.. விசாரணையில் பகீர் : பரபரப்பு திருப்பம்…!!!

திருநெல்வேலி டவுண் பகுதியை அடுத்த கோடீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசாருதீன்(35). சூப்பர் மார்க்கெட்,ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வந்துள்ளார்.

இவர் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அசாருதீன் கடையில் பணி செய்த பேட்டை பகுதியைச் சேர்ந்த பகவதி என்ற பெண் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் அசாருதீன் ஏற்பாட்டின் பேரில் பார்வதி என்பவரது வீட்டில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு(14-11-2023) கோடீஸ்வரன் நகர் பகுதியில் இருந்து அசாருதீன், பேட்டை வி.வி.கே தெருவில் உள்ள பார்வதி வீட்டிற்கு வந்து அங்கு பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் அசாருதீனை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடியவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

தொடர்ந்து மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அசாருதீன் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அசாருதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் சம்பவம் குறித்து பேட்டை காவல் நிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அசாருதீன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி டவுன் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம்(39), பாளையங்கோட்டை சிவந்திபட்டியை சேர்ந்த மூர்த்தி என்ற கார்த்திகேயன் (24), பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்த மந்திரமூர்த்தி (25) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சபரி மணி (23) ஆகிய நான்கு பேரும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஆனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 428

    0

    0