6 வயது மகளையே நாசம் செய்த பிரபல கட்சி நிர்வாகி… வேலியே பயிரை மேய்ந்த கொடூரம் : சென்னையில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2024, 1:07 pm

6 வயது மகளை பிரபல கட்சியை சேர்ந்த நிர்வாகி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் தலையில் அடிபட்டதாக எழும்பூர் மருத்துவமனை சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது மருத்துவர்கள் சிறுமியை முழு பரிசோதனை செய்தபோது சிறுமியின் பாலின உறுப்பில் காயம் இருப்பதை கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக சிறுமியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது அவருடைய தந்தையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

உடனடியாக அவருடைய தந்தை தந்தையும் புரட்சி பாரத கட்சியின் (புதுச்சேரி) மாவட்ட தலைவரான ரவியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முதலில் ரவி மறுப்பு தெரிவித்த நிலையில் போலீசார் கஸ்டடியில் எடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார்.

சிறுமியின் தாய் அங்கன்வாடி பணியாளர் என்பதும், ரவியின் இரண்டாவது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ