தலை சிதைந்து கொடூரமாக கொல்லப்பட்ட பிரபல ரவுடி : கட்டப் பஞ்சாயத்தால் கட்டம்கட்டிய மர்மநபர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan25 September 2024, 5:04 pm
திண்டுக்கல் அருகே காப்பிளியப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் தீன தயாள வர்மன்(32) இவர் செல்போன் சர்வீஸ் செய்யும் கடை நடத்து வருகிறார்.
இவருக்கு நாகஜோதி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மீது 2016 ஆம் ஆண்டு நடந்த கொலை தொடர்பு உடையவர் மற்றும் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மா.மு. கோவிலூர் அருகே உள்ள அம்மா குளக்கரையில் இன்று 25.09.24 மதியம் பட்டப்பகலில் தீன தயாள வர்மனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாளல் கத்தி போன்ற ஆயுதங்களால் தலை மற்றும் உடல் என பல இடங்களில் வெட்டி படுகொலை செய்தனர்.
மேலும் படிக்க: தப்பு செஞ்சாதான் பயப்படணும் : கோவில்களில் சிறப்பு பூஜை நடத்துங்க.. கட்சியினருக்கு ஜெகன் மோகன் அழைப்பு!
இது தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் முன் பகை காரணமாக இந்த படுகொலை நடைபெற்றுள்ளதாக தெரிவித்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.