சென்னையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்துக்கு சீல்.. பாஜக பிரமுகரால் வந்த சிக்கல்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 August 2024, 12:59 pm

பாஜக ஆதரவாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரான தேவநாதன் மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 150 ஆண்டுகள் பழமையான ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’இயக்குனராக உள்ளார். இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்புத் தொகை கொண்ட உறுப்பினர்களாக உள்ளனர்.

இதில் பெரும்பாலானவர்கள் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் ஆவார்கள். தங்களது ஓய்வூதிய பணத்தை அனைத்தையும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

இந்த நிறுவனத்தில் அதிகளவில் வட்டி தருவதாக ஆசைக்காட்டி ஏமாற்றி பணம் வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் உரிய முறையில் பணத்தை திருப்பி தராமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் தினந்தோறும் தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிறுவனத்தை நூறுக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் போராட்டமும் நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்யும் வகையில் இரண்டு வாரங்கள் தள்ளி தேதியிட்ட செக் கொடுக்கப்பட்டது.

ஆனால் அந்த செக்கும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரான தேவநாதன் யாதவை போலீசார் கைது செய்தனர்.

அவருடன் மோசடிக்கு உடந்தையாக இருந்த குணசீலன் மற்றும மகிமைநாதன் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பல கோடி ரூபாய் மோசடி வழக்கு தொடர்பாக தேவநாதனுக்கு சொந்தமான இடத்தில் இன்று சோதனை நடைபெற்றது. 11 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது 4 லட்சம் பணம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம், தி நகரில் உள்ள தேவநாதனின் வீடு, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த நபர்களின் வீடுகள் என 12 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் மைலாப்பூர் நிதி நிறுவனம் மற்றும் தேவநாதன் யாதவ்வின் தொலைக்காட்சியான வின் தொலைக்காட்சிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 300

    0

    0