விவசாய நிலத்தில் பட்டாசு ஆலை கட்ட எதிர்ப்பு : கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயி
Author: kavin kumar9 February 2022, 4:24 pm
தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே தனது நிலத்தை ஒட்டி பட்டாசு ஆலை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த விவசாயி, புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தனது நிலத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதுரகிரி (59). விவசாயம் செய்து வரும் சதுரகிரி நிலம் அருகே தனியார் பட்டாசு ஆலையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த தனியார் பட்டாசு நிறுவனம் தனது நிலத்திற்கு செல்லும் பாதையை மறித்து தனது நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாசார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் நிலத்தினை அளவீடு செய்ய அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதையெடுத்து விவசாயி சதுரகிரி நிலத்தினை அளவீடு செய்து தர வருவாய் துறையில் மனு அளித்துள்ளார். இருந்து போதிலும் சதுரகிரி நிலத்தினை அளவீடு செய்ய காலதாமம் ஏற்பட்டதாக தெரிகிறது.
மேலும் தனியார் பட்டாசு ஆலை நிர்வாகம் நீதிமன்றம் மூலமாக நடவடிக்கைகள் மேற்க்கொண்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட விவசாயி சதுரகிரி இன்று தனது விவசாய நிலத்திலேயே கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து அவர் எழுதிய கைப்பாற்றியது மட்டுமின்றி, உடலை உடற்கூறாய்வுக்க அனுப்ப முயன்றனர். ஆனால் விவசாயி உடலை எடுக்க விடமால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயி சதுரகிரியின் நிலத்தை முறையாக அளந்து கொடுக்க வேண்டுமெனவும், தற்கொலைக்கு காரணமான பட்டாசு ஆலை நிறுத்தினரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தினை கைவிட்டனர். பின்னர் போலீசார் உயிரிழந்த விவசாயி சதுரகிரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.