ஸ்கூட்டி மீது மோதிய கார்… 100 அடி தூரம் இழுத்து சென்ற விவசாயி : நெஞ்சை பதற வைத்த விபத்தின் பகீர் காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan28 October 2023, 10:00 pm
ஸ்கூட்டி மீது மோதிய கார்… 100 அடி தூரம் இழுத்து சென்ற விவசாயி : நெஞ்சை பதற வைத்த விபத்தின் பகீர் காட்சி!!
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலையில் ஸ்கூட்டி மீது அதிவேகமாக சென்ற கார் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள கீரனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (60). விவசாயியான இவர் நேற்று காங்கேயத்தில் மாட்டு தீவனம் வாங்கி கொண்டு ஸ்கூட்டியில் வீடு திரும்பினார். அப்போது சிவன்மலை பகுதியில் சென்ற போது அதிவேகமாக வந்த கார் மோதியதில் உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிராவில் விபத்து சம்பவம் பதிவாகி தற்போது காங்கேயம் பகுதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் ஸ்கூட்டியில் செல்லும் விவசாயி மீது பின்னால் அதிவேகத்தில் வந்த கார் மோதுவதும், பின்னர் சுமார் 100 அடி தூரத்திற்கு விவசாயி இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.