சாலையில் நடந்து வந்த விவசாயி வெட்டிப் படுகொலை : காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2022, 9:49 am

திருச்சி அருகே விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில்- உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தாத்தையங்கார் பேட்டை அடுத்த கொழிஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் தண்டன் மகன் செல்லத்துரை (50).

இவர் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தவர். தனது மனநிலை பாதித்த சூழ்நிலையில் பல்வேறு நபர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செல்லத்துரை அவ்வழியாக வந்த கொழிஞ்சிப்பட்டியை சேர்ந்த பிச்சை மகன் துரைராஜ் (வயது 65) என்பவரை அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது செல்லதுரையின் விரல்களும் வெட்டுப்பட்டது.

இதில் பலத்த காயமடைந்த துரைராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதில் கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட செல்லதுரையும் இறந்து கிடந்த துரைராஜ் அருகிலேயே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தா. பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த தாபட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரைராஜ் சடலத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து செல்லத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தா. பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Choreographer opens up about Silk Smitha's marriage to celebrity's son பிரபலத்தின் மகனுடன் திருமணம்… சில்க் ஸ்மிதா குறித்து நடன இயக்குநர் ஓபன்!