சபரிமலை சென்ற விவசாயிக்கு அடிச்சது ரூ.20 கோடி பரிசு : லாட்டரியில் காத்திருந்த அதிர்ஷ்டம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2024, 5:10 pm

சபரிமலை சென்ற விவசாயிக்கு அடிச்சது ரூ.20 கோடி பரிசு : லாட்டரியில் காத்திருந்த அதிர்ஷ்டம்!!!

புதுச்சேரியை சேர்ந்த விவசாயி ஒருவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வேண்டுதலை நிறைவேற்ற கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றார்.

அப்போது கேரளா அரசு விற்ற லாட்டரி சீட்டுகளையும் வாங்கி உள்ளார். அதுவும் பம்பர் பரிசாக 20 கோடி ரூபாய் லாட்டரி சீட்டை வாங்கி உள்ளார்.

சபரிமலை சென்று ஐயப்பனை சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பி அவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருந்திருக்கிறது.அதாவது லாட்டரி சீட்டை வாங்கியவர் அங்கு யாரையும் தொடர்பு கொண்டு போன் நம்பரை தெரிவிக்கவில்லை.

இருந்தாலும் வீட்டிற்கு வந்த அவர் தான் வாங்கிய லாட்டரி சீட்டை நமக்கு விழுந்திருக்கிறதா என்று பார்த்திருக்கிறார் அப்போது இவருடைய எண்ணிற்கு 20 கோடி ரூபாய் பம்பர் பரிசும் விழுந்துள்ளது.

பின்னர் அந்த லாட்டரி சீட்டோடு கேரளா சென்ற அவர் சம்பந்தப்பட்ட கடையில் சென்று தான் தான் இந்த 20 கோடி லாட்டரி சீட்டு வாங்கியதாகவும் தனக்கு தான் பரிசு விழுந்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை பெற்றுக் கொண்ட கேரளா அரசும் லாட்டரி எண்களை உறுதிப்படுத்தி அவருக்கு பரிசு தொகையும் அறிவித்துள்ளது.

கேரளாவுக்கு சாமி கும்பிட சென்றவருக்கு 20 கோடி ரூபாய் லாட்டரி சீட்டில் பரிசு விழுந்தது பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது மேலும் விவசாயின் நலன் கருதி கேரளா அரசு அவரது பெயரை வெளியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Redin Kingsley and Sangeetha Announce Pregnantவீட்டுல விஷேசம்… குட்டி கிங்கிஸ்லி Coming Soon : வெளியான வீடியோ!
  • Views: - 733

    0

    0