ஒரு வயது குழந்தையை தவிக்க விட்டு சென்ற தந்தை.. விபத்தில் பரிதாபம் : மனதை ரணமாக்கிய காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2024, 2:20 pm

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஈச்சம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (27). இவர் ஈச்சம்பட்டியிலிருந்து டீக்கடைக்கு செல்வதற்காக ஈச்சம்பட்டியில் இருந்து கிளம்பி நகரப்பட்டிக்கு தனதூ இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் .

அப்பொழுது திருமயத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஆறுமுகம் என்பவர் ஓட்டி வந்த காரில் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த சின்னத்துரை சம்பவ இடத்திலேயே பலியானார்.

சம்பவ இடத்தில் பலியான சின்னத்துரைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் கவின் என்ற ஆண் குழந்தை மட்டுமே உள்ளது.

தந்தையை இழந்த ஒரு வயது குழந்தையின் முன்பு உறவினர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இறந்த சின்னத்துரையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!