பேருந்து நிலையத்தில் அரசு பெண் அலுவலர் அதிரடி கைது : விசாரணையில் சிக்கிய ரூ.1500.. கையும் களவுமாக சிக்கினார்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2022, 3:42 pm

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பருவாய் பகுதியில் மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருபவர் செந்தில் குமார். இவர் அதே பகுதியில் ஸ்டேஷனரி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தனது இரண்டு பெண் குழந்தைகள் நலனுக்காக முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்பு தொகைக்கான பத்திர பதிவு செய்துள்ளார்.

இதற்காக பல்லடம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் பணிபுரியும் சமுக நலத்துறை மேம்பாட்டு அலுவலர் பசும்பொன் தேவியிடம் மனு அளித்துள்ளார். இதனையடுத்து பசும்பொன் தேவி பத்திரத்தை புதுப்பிக்க 3000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து செந்தில் குமார் சில தினங்களுக்கு முன்பு 1500 ரூபாய் ஆன்லைன் (கூகுள் பே) மூலமாக அளித்துள்ளார். மேலும் இன்று காலை மீதம் 1500 ரூபாய் தொகையை பல்லடம் பேருந்து நிலையத்தில் வைத்து கொடுத்துள்ளார்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு செந்தில் குமார் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பசும்பொன் தேவி கையூட்டு பெறுவதை கையோடு பிடித்து கைது செய்தனர்.
மேலும் பசும்பொன் தேவியை பல்லடம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் சசிலேகா தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சர் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பத்திர பதிவை புதுப்பிக்க வந்த செந்தில் குமாரிடம் 3000 ரூபாய் லஞ்சம் பெற்று சமூக நலத்துறை மேம்பாட்டு அலுவலர் கைதான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 861

    0

    0