கரூர் : கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசம் அடைந்தது.
கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், புகளூர் பகுதியில் ஈ.ஐ.டி பாரிக்கு சொந்தமான சர்க்கரை ஆலையின் குடோனில் ஒரு பகுதியாக அகர்பத்தியின் உற்பத்திக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கும் பவுடர் தாயரிக்கும் பணி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த அகர்பத்திக்காக பவுடர் தயாரிக்கும் பொருட்கள் தயார் செய்யும் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் தீயினால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, இந்த தீயானது, சுமார் 30 நிமிடம் எரிந்த நிலையில், இந்த தகவல் குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கும், தமிழ்நாடு காகித ஆலைக்கு சொந்தமான தீயணைப்பு துறைக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரு தீயணைப்பு வாகனங்களும் மொத்தமாக இணைந்து கூட்டுமுயற்சியால் தீயை முற்றிலும் கட்டுப்படுத்தி பெருமளவில் தீ சேதத்தினை பெருமளவில் தவிர்த்தனர்.
மேலும்., இந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் இல்லை என்றும், தீயினால் முற்றிலும் எரிந்த பொருட்களின் மதிப்பு சுமார் 5 லட்சம் வரும் என்றும் கூறப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த தீயானது. இயந்திரத்தில் இயங்கும் கன்வையர் பெல்ட் என்ற பெல்ட்டில் உள்ள ஐ டீலரில் ஏற்பட்ட திடீர் தீயால் தான் இந்த விபத்து நடந்திருக்க கூடும் என்கின்றனர் தனியார் சர்க்கரை ஆலை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் இந்த திடீர் தீ விபத்தினால் புகளூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.