இந்து முன்னணி பிரமுகருக்கு சொந்தமான பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து : இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண் பலியான சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2023, 9:12 pm

பட்டாசு கடையில் ஏற்ட்ட திடீர் தீ விபத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி துரிதப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா உட்பட்ட செம்பட்டி வத்தலகுண்டு சாலையில் செம்பட்டி அருகே இந்து முன்னணி திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஜெயராம் என்பவர் பல வருடங்களாக இப்பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.

மேலும் பட்டாசு கடையின் மேற்பகுதியில் ஜெயராம் தனது மனைவி ராணி உடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் திடீரென வீட்டின் கீழ் பகுதியில் இருந்த பட்டாசுகள் வெடிக்கத் துவங்கின.

இதை பார்த்த பொதுமக்கள் உடஅன செம்பட்டி காவல்துறைக்கும், ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

பொதுமக்கள் தகவலை அடுத்து உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்நிலையில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்ட நிலையில் கட்டிடங்கள் இடிந்து விழ தொடங்கியது.

தற்போது மேலே உள்ள கட்டிடம் முற்றிலுமாக இடிந்து விழுந்தது மேலும் வீட்டின் உட்பகுதியில் ஜெயராம் மற்றும் ராணி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வீடுகள் இடிந்து விழுவதன் காரணமாக கட்டிடங்களை அப்புறப்படுத்தினால் மட்டுமே வீட்டின் உள்ளே யாரும் இருக்கிறார்களா என்பது தெரியும் என தற்போது செம்பட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…