குப்பைக் கிடங்கில் மளமளவென பற்றி எரிந்த தீ… பரவிய புகைமூட்டம் : போராடிய தீயணைப்புத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2023, 9:22 am

கோவை ஈச்சனாரி- செட்டிபாளையம் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான புகைமூட்டம் நிலவியது.

குப்பையில் பிடித்த தீ மளமளவென எரிந்ததால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் நிலவியது. இதனால் அவ்வழியாக சென்றவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே குப்பை கிடங்கின் அருகில் இருந்த இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான குப்பைகளை தரம் பிரிக்கும் குடோன் ஒன்றிலும் தீப்பிடித்தது. சுமார் அரைமனை நேரத்திற்கு மேலாக தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!