வெள்ளத்தில் மூழ்கிய வகுப்பறை… இதுக்கு ஒரு முடிவே இல்லையா? கல்வி கற்க முடியாமல் தவிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
15 November 2023, 2:22 pm

வெள்ளத்தில் மூழ்கிய வகுப்பறை… இதுக்கு ஒரு முடிவே இல்லையா? கல்வி கற்க முடியாமல் தவிக்கும் மாணவர்கள்!

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த நல்லாவூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கடந்து இரண்டு தினங்களாக கன மழை பெய்து வருகிறது, கனமழை காரணமாக பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது.

அந்த வகையில் நல்லாவூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் கல்வி பயிலும் வகுப்பறைகள் முழுவதும் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.

மழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள் கல்வி பயில முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இதுவரை மழை நீரை வெளியேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அங்குள்ள பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் மாண மனைவிகள் கல்வி கற்றால் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் எனவும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் இனிவரும் மழை காலங்களில் மழை நீர் தேங்கி நிற்காத அளவிற்கு பள்ளி கட்டிடங்களின் தரத்தை உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…