ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பன் எரித்துக் கொலை.. நாடகமாடிய நண்பர்கள் : சினிமாவை மிஞ்சிய ஷாக் சம்பவம்!
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த அல்லாணுார் பகுதியில், கடந்த செப்டம்பர் 16-ம் தேதி குடிசை வீ ஒன்று எரிந்து சாம்பலானது. அதில் உடல் கருகிய நிலையில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது கொலையா தற்கொலையா என ஒரத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது தான் ஜெயஸ்ரீ என்பவர் இறந்தது தனது தம்பி சுரேஷ் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனது தம்பி பெயரில் 1 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் போட்டுள்ளதாகவும், அந்த பணத்தை திரும்ப பெற வேண்டும் என நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தற்கொலை அல்ல கொலை என உறுதி செய்த போலீசார், கொலை தொடர்பாக டில்லிபாபுவின் நண்பரான, சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை நேற்று, கைது செய்தனர்.
மேலும் வேலுார் மாவட்டம், கலாஸ்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன், தாம்பரம் அடுத்த மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கீர்த்தி ராஜன், ஆகியோரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இதில் சுரேஷ், சென்னையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார்.
இவர்,இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விபத்து காப்பீடு திட்டத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், இன்சூரன்ஸ் செய்துள்ளார். இந்த தொகையை, தான் உயிருடன் இருக்கும் பொழுதே பெற வேண்டும் என்ற நோக்கத்தில், தன் வயதுடைய நபரை பல மாதங்களாக அவர் தேடி வந்துள்ளார்.
அப்போது தான் அயனாவரம் பகுதியில், 10 ஆண்டுகளுக்கு முன்பாக சுரேஷ் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த டில்லிபாபு என்பவரின் நினைவு வந்துள்ளது. இதனால், டில்லி பாபுவை அவர் பல்வேறு இடங்களில் தேடி உள்ளார்.
இதனைத்தொடர்ந்து எண்ணுார் அடுத்த ஏராணாவூர் பகுதியில் வசித்து வருவதை அறிந்து, அந்த குடும்பத்தினருடன் பழகி, அடிக்கடி வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
பின்னர் தனது கூட்டாளிகளான ஹரி கிருஷ்ணன் மற்றும் கீர்த்தி ராஜனுடன், அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.அங்கு, சில நாட்கள் தங்கி, டில்லிபாபுவின் அம்மா லீலாவதி மற்றும் டில்லிபாபுவிடம் இவர்கள் 3 பேரும் நன்றாக பேசி பழகி உள்ளனர்.
பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி வெளியில் சென்று வரலாம் என டில்லிபாபுவை அழைத்துக் கொண்டு அவர்கள் 3 பேரும் மேல்மருவத்துார் வரை வந்து, இருசக்கர வாகனத்தை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் விட்டு பின்னர் பேருந்தில் புதுச்சேரி சென்று, மது வாங்கிக் கொண்டு, மறுபடியும் பாண்டிச்சேரியில் இருந்து அச்சிறுபாக்கம் அடுத்த அல்லாணுார் பகுதிக்கு வந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஏற்கனவே, திட்டமிட்டு அப்பகுதியில் வீட்டுமனை ஒன்று வாங்கி, அதில் குடிசை வீடையும் கட்டியுள்ளனர்.சம்பவத்தன்று அந்த குடிசை வீட்டிற்கு வந்துள்ளனர்.
பின்னர் ஹரி கிருஷ்ணன், கீர்த்தி ராஜன், சுரேஷ், டில்லிபாபு ஆகியோர் குடிசை வீட்டில் மது அருந்தி உள்ளனர். அப்போது, சுரேஷ், ஹரிகிருஷ்ணன், கீர்த்தி ராஜன் ஆகியோர், ஏற்கனவே திட்டமிட்டபடி, டில்லி பாபுவின் கழுத்தை நெறித்து அவர்கள் கொலை செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சடலத்தை குடிசை வீட்டில் வைத்து, குடிசை வீடு முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளனர். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி, அரக்கோணம் அடுத்த திருவாலங்காடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
இதனிடையே, குடிசை வீட்டில் எறிந்த நபர் சுரேஷ், என உறுதிப்படுத்த, சுரேஷின் அக்காவான மரிய ஜெயஸ்ரீ என்பவர் ஒரத்தி போலீசாரிடம் மனு அளிக்க வைத்து செங்கல்பட்டு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் இருந்து சடலத்தை, உடற்கூறாய்வு முடிந்து, சடலத்தை பெற்றுக்கொண்டு, அயனாவரம் பகுதியில் அடக்கம் செய்தனர்.
இதனிடையே சுரேஷ் உயிரிழந்து விட்டதாக, அப்பகுதி முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்த நிலையில், டில்லிபாபுவின் அம்மா லீலாவதி என்பவர், நண்பர்களுடன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற தனது மகன் குறித்து தகவல் ஏதும் இல்லை என கூறி எண்ணுார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
ஆனால் போலீசார் விசாரணை ஏதும் நடத்தாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு குறித்து வழக்கு மீண்டும் வேகம் எடுத்தது.
பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்ததில், இன்சூரன்ஸ் தொகையான ஒரு கோடி ரூபாய் பெரும் நோக்கில், நண்பர்களான கீர்த்தி ராஜன் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாயும், சுரேஷ் 60 லட்சம் ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் என அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு, ஒரே வயதுடைய நபரான தனது பழைய நண்பர் டில்லி பாபுவை கொலை செய்து, குடிசை வீட்டில் வைத்து எரித்து, தான் இறந்ததாக நாடகம் ஆடியது விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்தது.
சினிமாவை விட மிஞ்சிய இந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.