நம்பி அழைத்த நண்பன்.. விருந்து கொடுத்த வீட்டுக்கே ரெண்டகம் செய்த இளைஞர்.. ஷாக் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2024, 6:03 pm

நம்பி அழைத்த நண்பன்.. விருந்து கொடுத்த வீட்டுக்கே ரெண்டகம் செய்த இளைஞர்.. ஷாக் சம்பவம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பஞ்சு. இவரது மகன் தேவேந்திரன் (30).

இவர் கடந்த 15-ஆம் தேதி தனது உறவினர் வீட்டில் நடந்த காதணி விழாவிற்கு திருமங்கலம் கரிசல்பட்டியைச் சேர்ந்த தனது நண்பர் ராஜ்குமாரை அழைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்திருந்த ராஜ்குமாரை அழைத்துக் கொண்டு பஞ்சு குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு விசேஷ வீட்டுக்கு சென்றனர்.

அப்போது தான் ஊருக்கு செல்வதாக கூறி ராஜ்குமார் விசேஷ வீட்டிலிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இந்நிலையில் மாலையில் வீட்டுக்கு தேவேந்திரன் வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.

மேலும் படிக்க: தமிழகத்தில் கல்வி காவி மயமாகவில்லை.. கலைஞர் மயமாகியுள்ளது : தமிழிசை குற்றச்சாட்டு!!

இது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் பஞ்சு புகார் செய்தார். புகாரில் ராஜ்குமார் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததையடுத்து நத்தம் போலீஸார்கள் ராஜ்குமாரை விசாரணை செய்தனர்.

இதில் பணம் திருடியது தெரிய வரவே வழக்கை பதிவு செய்த போலீஸார் ராஜ்குமாரை கைது செய்தனர்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 301

    0

    0