மதுபோதையில் இளைஞர்களுக்குள் தகராறு.. திடீரென துப்பாக்கியால் சுட்ட நண்பன் : அதிர்ந்து போன திருச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
9 April 2025, 2:15 pm

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது போதையில் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

இதையும் படியுங்க: கோவை மருதமலை கோவில் கும்பாபிஷேகத்தில் விதி மீறல்? நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

போதை தலைக்கேறிய பாண்டியன் இருசக்கர வாகனத்தை அங்கே விட்டுவிட்டு சென்றுள்ளார். இதை தொடர்ந்து இருசக்கர வாகனத்தை காணவில்லை என வீரமணி வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.

இதனை அறிந்த வீரமணியின் நண்பர் சந்தோஷ் குமார் அவரது நண்பருடன் இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து பாண்டியனிடம் கொடுக்க சென்றுள்ளார்.

A friend shot his friend with a gun: Shocking incident!

அப்போது பாண்டியன் சந்தோஷ் குமாரை தான் வைத்திருந்த ஏர்கன் (விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த) துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த சந்தோஷ் குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சந்தோஷ் குமார் சிகிச்சை பெற்று வருகின்றார்.இதுகுறித்து தகவலின் பெயரில் லால்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர….

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…
  • Leave a Reply