மதுரையில் விஜயகாந்த்துக்கு முழு உருவ வெண்கலச் சிலை..? தமிழக அரசு முடிவு? எதிர்நோக்கும் தேமுதிக மற்றும் ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2024, 4:08 pm

மதுரையில் விஜயகாந்த்துக்கு முழு உருவ வெண்கலச் சிலை..? தமிழக அரசு முடிவு? எதிர்நோக்கும் தேமுதிக மற்றும் ரசிகர்கள்!!

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28 ஆம் தேதி சென்னையில் உயிரிழந்தார். விஜயகாந்துக்கு மதுரையில் சிலை வெண்கலச் வேண்டும் என்று விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கோரிக்கை கடிதம் அனுப்பி இருந்தார்.

இதுகுறித்து மதுரை மேயர் இந்திராணி மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களிடம் கலந்தாலோசித்து அரசிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டச் செயலாளர் விஜயகாந்த் மறைவுக்கு சென்று விட்டு மதுரை திரும்பியவுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை மாநகர் பகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முழு உருவ வெண்கலச் சிலை வைக்க வேண்டும் என கோரிக்கை மனுவை வழங்கினர் அதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அரசிடம் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.

தொடர்ந்து மதுரை மாநகர் பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 624

    0

    0