சினிமா பட பாணியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை பறித்த கும்பல் : டோல்கேட் அருகே போலீஸ் விரித்த வலை.. தொக்கா சிக்கிய களவாணிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2022, 2:07 pm

விழுப்புரம் அருகே சினிமா பட பாணியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தங்க தாலியை பறித்துக் கொண்டு மாற்று பேருந்தில் ஏறி தப்பிக்க முயன்ற 5 பேர் கைது.

சென்னையில் இருந்து விழுப்புரம் வந்த அரசு பேருந்து திண்டிவனம் பேருந்து நிலையத்தில் நின்றது. அப்போது அரசு பேருந்தில் ஏறிய ஒரு பெண் விழுப்புரம் நோக்கி பயணம் செய்தார்.

அப்போது பேருந்தில் பயணம் செய்த ஐந்து பேர் கொண்ட கும்பல் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே வந்தபோது பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை அறுத்து விட்டு மாற்று பேருந்தில் தப்பி சென்ற போது அந்தப் பெண் அலறல் சத்தம் கேட்டு விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் குற்றவாளிகள் தப்பிச்சென்ற அந்த பேருந்தை விரட்டிச் சென்று மடக்கி ஐந்து பேரை பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த பாண்டியன், யோகராஜ், பாலு, பிரதாப், கண்ணதாசன் என்பது தெரியவந்தது.
உடனடியாக கைது செய்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள். வழக்கு பதிவு செய்த விக்கிரவாண்டி காவல்துறையினர் ஐந்து பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா பட பாணியில் ஓடும் பேருந்தில் செயினை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!