ஆடு திருட சொகுசு காரில் உலா வரும் கும்பல்… கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் : ஷாக் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 October 2023, 11:08 am

ஆடு திருட சொகுசு காரில் உலா வரும் கும்பல்… கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் : ஷாக் சம்பவம்!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வைரகோபுரம் பகுதியை சேர்ந்த அராபத் ( 28 ) , காரைக்குடி அருகே மஜா தோப்புதிடல் ஆறுமுகம் ( 52 ) , காரைக்குடி அருகே ஒத்தகடை செல்வராஜ் ( 55 ) ஆகிய மூவரும் இன்னோவா சொகுசு காரில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழபாலம் அடுத்த செங்குளம் மாரியம்மன் கோவில் தெரு பகுதிக்கு வந்தனர்.

அப்பகுதியில் இரண்டு ஆடுகளும் முத்துபேட்டை சாலையில் இரண்டு ஆடுகள் என மொத்தம் நான்கு ஆடுகளையும் திருடிக்கொண்டு கும்பகோணம் சாலையில் செல்வதற்காக அண்ணவாசல் சேனிய தெருவில் வந்துள்ளனர்.

அப்போது அப்பகுதியில் ஆடுகள் இருப்பதை கண்டு வாகனத்தை மெதுவாக சாலை ஓரம் கட்டியபோது அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து வாகனத்தை சோதனையிட்டபோது சொகுசு வாகனத்தில் ஆடுகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது .

உடனடியாக மன்னார்குடி டிஎஸ்பி அலுவலகத்திற்கு விபரத்தை தெரிய படுத்திய உடன் உடனடியாக வந்த காவல்துறையினர் மூவரையும் அழைத்து கொண்டு டிஎஸ்பி அஸ்வத் ஆண்டோ அந்தோணி முன்பு நிறுத்தபட்டு விசாரணை நடத்தினர்.

இதில் மூவரும் நான்கு ஆடுகள் திருடியதை ஒப்புகொண்டனர். விசாரணையில் மூவரின் பெயரிலும் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்தது .

மன்னார்குடி காவல்துறையினர் சொகுசு கார் மற்றும் நான்கு ஆடுகளையும் பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர் .

  • Mookuthi Amman 2 latest shooting update அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!