அரசு மருத்துவமனைக்குள் பயணிகளுடன் புகுந்த அரசு பேருந்து… ஓட்டுநரின் நெகிழ்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2023, 2:01 pm

அரசு மருத்துவமனைக்குள் பயணிகளுடன் புகுந்த அரசு பேருந்து… ஓட்டுநரின் நெகிழ்ச்சி சம்பவம்!!

சூளகிரி அருகே திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் மயங்கி விழுந்த பெண்: ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பேருந்தில் பயணிகளுடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஓட்டுநரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது

பெங்களூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி 60 பயணிகளுடன் அரசு பேருந்தை ஓட்டுநர் முருகன் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஓட்டிவந்தபோது 50 வயது மதிக்கதக்க பெண் மயங்கி விழுந்துள்ளார்..

பேருந்து நிறுத்தப்பட்டு ஆம்புலன்சை அழைத்தும் வர தாமதமானதால் 60 பயணிகளுடன் அரசு பேருந்தை சூளகிரியில் உள்ள 24மணிநேர இலவச அவசர சிகிச்சை மையத்தில் சேர்த்துள்ளனர்

மயங்கி விழுந்த பெண் திருப்பத்தூரை சேர்ந்த பாக்யலட்சுமி(55) என தெரியவந்தநிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணை பேருந்தை நேரடியாக சிகிச்சை மையத்திற்க்கே ஓட்டி சென்று பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர், நடத்துனரின் மனதாபிமான செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது..

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 446

    0

    0