புல்லட் பைக்கில் படுத்து தூங்கிய பச்சை பாம்பு : வாகன ஓட்டியை மிரள வைத்த அதிர்ச்சி வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2023, 9:54 am

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பாம்பு ஏறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இருசக்கர வாகன சீட்டின் கீழே பதுங்கி இருந்த பச்சை பாம்பை உயிருடன் பிடித்து மரத்தில் விட்டனர்.

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அவர்கள் கொண்டுவரும் வாகனத்தை அலுவலக கட்டிடம் பின்புறம் நிறுத்தி வைப்பது வழக்கம்

இந்த நிலையில் வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்த பாலாஜி என்பவர் ( Enfield ) இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்று விட்டு மீண்டும் வாகனத்தை எடுக்க வரும்போது வாகனத்தின் சீட்டின் கீழே பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்

https://vimeo.com/858113225?share=copy

பின்பு அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தின் சீட்டை அப்புறப்படுத்தி பதுங்கி இருந்த பச்சை பாம்பை பாதுகாப்பாக பிடித்து சென்று உயிருடன் மரத்தில் விட்டனர் இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Ajith Kumar Vidaamuyarchi release date விடாமுயற்சி படத்தின் புது அப்டேட் வந்தாச்சு…பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!
  • Views: - 417

    0

    0