குன்னூரில் சாலையை மறித்த யானை கூட்டம்.. அரசு பேருந்தை ஓட்டுநர் திருப்பியதால் பயணிகள் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan13 May 2024, 9:57 am
குன்னூரில் சாலையை மறித்த யானை கூட்டம்.. அரசு பேருந்தை ஓட்டுநர் திருப்பியதால் பயணிகள் ஷாக்!
தமிழகத்தில் அதிக வெயில் காணப்படும் நிலையில் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி ஆறு காட்டு யானைகள் கடந்த இரு வாரங்களாக மேட்டுப்பாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரிகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஓரம் பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதால் காட்டு யானைகள் கடந்த இரு வாரங்களாக முகாமிட்டிருந்த நிலையில் இன்று ஆறாவது கொண்டை ஊசி வளைவு மற்றும் பத்தாவது கொண்டை ஊசி வளைவில் யானைகள் நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் வரவே குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் உத்தரவின்படி வனத்துறையினர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் படிக்க: டெல்லி – சென்னை.. சவுக்கு சங்கர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ்.. விசாரணையில் இறங்கிய போலீஸ்!
அப்பொழுது பத்தாவது கொண்டை ஊசி வளைவில் ஒற்றை யானை நிற்பதைக் கண்டு பேருந்து ஓட்டுனர் பேருந்தை திருப்பி கீழ்நோக்கி இயக்கினார்.
தற்போது கோடை சீசன் துவங்கிய உள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலை செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.