மொத்தமாக வந்த யானைக் கூட்டம்… 60 யானைகள் வந்ததால் அச்சம் : 10 கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2023, 12:49 pm

மொத்தமாக வந்த யானைக் கூட்டம்… 60 யானைகள் வந்ததால் அச்சம் : 10 கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!!

கர்நாடக மாநிலம் பன்னார் கட்டா வனப்பகுதிலிருந்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் யானை கூட்டங்கள் தமிழகத்திற்குள் நுழைந்து சானமாவு வனப்பகுதியில் தஞ்சமடையும்.அதேபோல் இந்த ஆண்டும் ஜவளகிரி என்னும் வனப்பகுதி வழியாக நூற்றுக்கு மேற்பட்ட காட்டு யானைக் கூட்டங்கள் தமிழக எல்லைக்குள் புகுந்தது,

பல குழுக்களாக பிரிந்த யானை கூட்டங்கள் தற்போது 60 க்கும் மேற்ப்பட்ட யானை கூட்டங்கள் தேன்கனிக்கோட்டை வழியாக சூளகிரி அடுத்த சானமாவு வனப்பகுதிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு வந்தடைந்தது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சானமாவு வனப்பகுதியில் இருந்து கெலமங்கலம், ஊடேதுர்கம் வழியாக வனப்பகுதிக்கு விரட்டியடிக்கபட்டது.

தற்போது விவசாய நிலத்தில் பயிரிடபட்ட ராகி, நெல் அறுவடை காலம் என்பதால் யானைக் கூட்டங்களை விரட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்

இந்த நிலையில் இன்று காலை மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு 60 காட்டு யானைகள் வந்தடைந்தது, இதனை தொடர்ந்து சானமாவு வனப்பகுதியில் உள்ள 10 க்கும் மேற்பட்ட வனப்பகுதி ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து கண்காணித்த வந்த வனத்துறையினர் யானைக் கூட்டங்களை நேற்று மாலை முதல் 20க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் விரட்டும் பணியை மேற்கொண்டனர்,

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ