குட்டிகளுடன் ஊருக்குள் புகுந்த யானை கூட்டம் : அலறியடித்து ஓடிய மக்கள்.. விரட்டும் பணியில் வனத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2022, 7:07 pm
Elephant - Updatenews360
Quick Share

கோவை மதுக்கரை வனத்துறைக்கு உட்பட்ட பகுதியான ஐயாசாமி மலை பகுதியில் இருந்து இன்று காலை சுமார் மூன்று குட்டிகளுடன் மூன்று பெரிய யானைகள் என ஆறு யானைகள் ஜெகந்நாதன் நகர் பகுதியில் ஊருக்குள் புகுந்தது.

பேரூர் பச்சாபாளையம் பகுதியில் குட்டிகளுடன் யானைகள் திரிவதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் யானையை விரட்டுப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மலைப்பகுதிக்கு செல்லாமல் போக்கு காட்டிய யானை கூட்டம், தனியார் பள்ளி அருகே உள்ள சோளக்காட்டில் புகுந்து நின்றது.

உதவி வனப்பாதுகாவலர் செந்தில்குமார், மதுக்கரை வனச்சரகர் அருண்குமார், வனச்சரகர் பிரபு, உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

குட்டிகளுடன் யானை இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் யானை கூட்டத்தை வனத்திற்குள் விரட்டும் பணி செய்ய இருப்பதாக வனத்துறை சார்பில் தெரிவித்தனர்.

இதற்கிடையே யானை கூட்டத்தை காண சுற்று வட்டார பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 507

    0

    0