அதிவேகமாக வந்த கார்.. நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து : கோவையில் கோரம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2023, 11:03 am

அதிவேகமாக வந்த கார்.. நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து : கோவையில் கோரம்!!!

கோவை எட்டிமடையில் இருந்து கோவையை நோக்கி வந்த காரை 22 வயது இளைஞர் ஓட்டி வந்தார். அப்போது கார் திருமலையாம்பாளையம் ஆர்.டி.ஓ சோதனை சாவடி எதிரே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது.

இதில் காரில் வந்த 8 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்து வந்த மதுக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூக்க கலக்கத்தில் கார் ஓட்டுநர் லாரியின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி