30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி.. சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்..!(வீடியோ)
Author: Udayachandran RadhaKrishnan3 March 2023, 11:23 am
30 அடி உயர மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த கூலி தொழிலாளியை சாலை வசதி இல்லாத காரணத்தினால் தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பன்றிமலை பகுதியில் வசித்து வரும் பழனிவேல் (வயது 45) என்பவர் ரெட்டர பாறையில் இருந்து மலையாண்டிபுரம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் மரத்தை வெட்டி சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
எதிர்பாராத விதமாக 30 அடி உயர மரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார் காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு வாகனத்தின் மூலமாக அழைத்துச் செல்வதற்கு சாலை வசதிகள் முறையாக இல்லை என்பதால் தொட்டில் கட்டி உடன் பணி செய்து வந்த கூலி தொழிலாளிகள் தூக்கிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் பன்றிமலை ரெட்டரபாறையில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் மலையாண்டி புறம் என்ற மலைப் பகுதியில் மலைவாழ் மக்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட வீடுகளுடன் இக்கிராமத்தில் வசித்து வருகிறார்கள் அதேபோல் மலைப்பகுதியில் 100-க்கும் குடியிருப்புகளுடன் தோட்டத்து பகுதிகளும் வசித்து வரும் நிலையில் முறையான சாலை வசதி இல்லாததால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படும் காலங்களில் அவசர சிகிச்சைக்காக கூட வாகனத்தில் செல்ல முடியாமல் அடிக்கடி இதுபோன்று தொட்டில் கட்டி தூக்கி செல்லும் சம்பவம் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள்.
இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் இப்பகுதி மலைவாழ் மக்களின் நலன் கருதி உடனடியாக சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்