‘இயேசப்பா பாத்துக்குவாரு’.. உயிருக்கு பயந்து பூட்டிய வீட்டுக்குள் 2 வருடமாக குடும்பம் நடத்திய வழக்கறிஞர்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 May 2023, 6:55 pm

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஓல்ட் ஸ்டேட் பேங் காலனி தெருவில் வசித்து வரும் பெர்ஷியஸ் அலெக்சாண்டர்- மாலதி தம்பதியினர் மற்றும் அவர்களின் இரண்டு மகள்கள் தங்களை வீட்டில் சிறைவைத்து கொண்டு கொரோனாவிற்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களாக தங்களை தாங்களாகவே சிறை வைத்து கொண்டு வெளியே வரவில்லை என சமூக நலதுறை அதிகாரிக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் இன்று தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உடன் சமூக நல துறை அதிகாரி சரோஜினி தலைமையில் அங்கு சென்றனர்.

அப்போது வீடு பூட்டிய நிலையில் இருந்தது. பக்கத்தில் விசாரித்த போது சரிவர பதில் தெரிவிக்காததால், கூப்பிட்டும் பதில் வராததால் உடனடியாக வீட்டின் வெளி கேட்டில் ஏறி குதித்து பின்னர் கேட்டை திறந்து தீயணைப்புத் துறையினர் போலீசார்,அதிகாரிகள் உள்ளே புகுந்தனர்.

அப்போது வீட்டுக்குள் தங்களை சிறை வைத்தபடி இருந்த வழக்கறிஞரான பெர்சியஸ் அலெக்ஸாண்டர் அவரது மனைவி மாலதி மற்றும் திருமண வயதை எட்டிய பட்டப் படிப்புகள் முடித்த இரண்டு மகள்கள் அங்கிருந்தனர்.

அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்து வந்தனர். மூன்று விதமான காரணங்களையும் தெரிவித்தனர்.

கொரோனவிலிருந்தே நாங்கள் வீட்டில்தான் உள்ளோம் எனவும் மேலும் தங்களுக்கு உயிருக்கு ஆபத்திருப்பதாகவும் வெளியே வந்தால் எங்களை சுட்டுவிடுவதாகவும் தங்களை திட்டமிட்டு மர்ம நபர்கள் கொல்ல மறைந்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் தாங்கள் நேரடியாக ஏசு விடம் பேசுவதாக பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர் மேலும் சாப்பிடுவதற்க்கு நாங்கள் தினமும் ஆர்டர் செய்து சாப்பிடுவதாகவும் எங்களுக்கு நிறைய சொத்து பணம் இருப்பதாகவும் எங்களுக்கு எந்த குறையும் இல்லை எனவும் கூறினார்கள்.

ஆனால் இரண்டு பிள்ளைகளும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதுபோல் போலீசார் கூறினார்கள். ஆனால் அவர்கள் பேச்சு முன்னுக்கு பின்னாக இருந்தது.

இதில் தாங்கள் நலமாக இருப்பதாகவும் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதையும் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு சென்றனர்.

இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்களுக்கு சொந்தமான இடம் ஒன்று நாகர்கோவில் உள்ளது. அதை வாடகைக்கு விடப்பட்டுள்ளனர். ஆனால் அந்த நபரை காலி செய்ய கூறியுள்ளனர்.

ஆனால் அந்த நபர் இவர்களை மிரட்டியதாக இவர்கள் தெரிவித்துள்ளார்கள் அந்த கடையை மீட்டு தாருங்கள் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே நாளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துவிட்டு இவர்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்யபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர்களை அழைத்து செல்ல எவ்வளவோ முயன்ற போது அவர்கள் வர மறுத்துள்ளனர். மேலும் அவரது உறவினர் ஒருவர் இதுபோன்று அத்துமீறி வீட்டில் புகுந்து மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என பாராமல் விசாரணை மேற்கொண்டது, கண்டிக்கத்தக்கது.

அவர்கள் எப்பொழுதும் பிரார்த்தனையில் இருப்பார்கள் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என போலீசாரிடமும் செய்தியாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 511

    0

    0