விவசாயி தோட்டத்தில் புகுந்த சிறுத்தை… கன்றுக்குட்டியை ருசி பார்த்தது : பொதுமக்கள் அச்சம்.. ஸ்பாட்டில் வனத்துறை விசாரணை!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2022, 1:14 pm

கோவை : பொள்ளாச்சி அருகே காளியாபுரம் விவசாயி தோட்டத்தில் கட்டி வைத்திருந்த கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரம் மாட்டேகவுண்டன் கோவில் பெரியனை வாய்க்காய் அருகில் உள்ள தோட்டத்தில் விவசாயி முருகேசன் என்பவருடைய
தோட்டத்தில் மூன்று பசு மாடுகள் வளர்த்து வருகிறார்.

மாடு மற்றும் கன்று குட்டிகளை தோட்டத்தில் உள்ள மாட்டு சாலையில் கட்டி வைத்து விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டு இன்று மாலை தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது மாட்டு சாலையில் கட்டி வைத்திருந்த மாட்டை மர்ம விலங்கு கடித்து இறந்த நிலையில் இருந்தது.

இதை பார்த்த முருகேசன் அருகிலுள்ள தோட்டக்காரரை உதவிக்கு அழைத்து உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . வனத்துறையினர் அங்கு சுற்றியுள்ள பகுதிகளில் தடயங்களை சேகரித்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது,

கடந்த ஒரு மாத காலமாக சிறுத்தை புலி நடமாட்டம் காளியாபுரம், ஓட்ட கரடு, புளியங்கண்டி,மாட்டை கவுண்டன் கோவில், வேட்டைக்காரன் புதூர் போன்ற பகுதிகளில் கால்நடைகளை தாக்கி உயிரிழந்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்பட்டுள்ளனர் மேலும் சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறை உயர் அதிகாரிகளிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் வேதனையுன் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…