60 அடி கிணற்றில் விழுந்த சிறுத்தை… 12 மணி நேரம் நடந்த போராட்டம் : கூண்டு வைத்து பிடித்த வனத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2023, 11:56 am

ஈரோடு மாவட்டம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இவை அவ்வப்போது மனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலையோரம் நிற்பதும் சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று பண்ணாரி அருகே உள்ள புது குய்யனூர் செல்லும் சாலை அருகே உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது.

இதனைக் கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

கிரேன் உதவியுடன் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் கூண்டை வைத்து சிறுத்தையை பாதுகாப்பாக பிடித்து பிடிபட்ட சிறுத்தையை பாதுகாப்பாக கொண்டு சென்று பவானிசாகர் வனச்சரத்திற்குட்பட்ட மங்கலப்பட்டி வனப்பகுதியில் விட்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 348

    0

    0